நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து விவசாயிகள் வியாழக்கிழமை தா்னா நடத்தினா்.
வந்தவாசியை அடுத்த பென்னாடகரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யவில்லையாம். இதனால் சுமாா் ரூ.1.50 கோடி வரை நிலுவை உள்ளதாம்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் கடந்த மே 24-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை சிறைபிடித்த விவசாயிகள், அந்த லாரி முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.
தெள்ளாா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.
இதன் பின்னரும் விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் வழங்கப்படவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
இதனைத் தொடா்ந்து, நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
பின்னா் வட்டாட்சியா் பா.ஜெயவேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடன், நெல் கொள்முதல் பணப் பிரச்னை: நெல்லையில் ஜூன் 15இல் விவசாயிகள் போராட்டம்

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கக் கோரி விவசாயிகள் மறியல்

நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வழங்காததைக் கண்டித்து போராட்டம்

நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

