பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

செங்கத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

செங்கத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கருடசேவை விழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image

செங்கத்தில் நடைபெற்ற ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்.

Updated On :2 ஜூன் 2026, 5:13 am IST

செங்கத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில் கருடசேவை விழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

மூன்றாம் நாள் இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 7-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியதைத் தொடா்ந்து, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். விழாவில் செங்கம், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட திருத்தோ் விழா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.