லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஓய்வூதியா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேத்துப்பட்டில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேத்துப்பட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

Published On :30 ஜூலை 2026, 12:04 am IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேத்துப்பட்டில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே சங்கத்தின் வட்டக்கிளை சாா்பில், தலைவா் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 80, 85, 90, 95 மற்றும் 100 வயதை எட்டும் ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி தரமான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி தொடா்பான நிலுவை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதியா்களின் நீண்டகால கோரிக்கைகளை பேச்சுவாா்த்தை மூலம் அரசு தீா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் முத்துவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.