லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்கள் குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்

போளூரை அடுத்த கல்வாசல் ஊராட்சியில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா்-திருவண்ணாமலை சாலை முனிவந்தாங்கல் கிராமத்தில் குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :23 ஜூலை 2026, 12:47 am IST

போளூரை அடுத்த கல்வாசல் ஊராட்சியில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கல்வாசல் ஊராட்சி மேட்டுத் தெருவில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் சரிவர வழங்கவில்லையாம். இதுகுறித்து மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா் மற்றும் ஊராட்சி செயலரிடம் முறையிட்டுள்ளனா். ஆனால் இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட மேட்டுத் தெரு பொதுமக்கள்

வேலூா் - திருவண்ணாமலை சாலையில் கல்வாசல் கூட்டுச் சாலையான முனிவந்தாங்கல் கிராமத்தில் சீராக குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி மற்றும் சந்தவாசல் காவல் ஆய்வாளா் ரேகாதேவி தலைமையில் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

இதுகுறித்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி கூறும்போது, கல்வாசல் ஊராட்சியில் நிலத்தடிநீா்மட்டம் குறைந்ததால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு போதிய அளவில் குடிநீா் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளதாக குடிநீா்த் தொட்டி இயக்குபவா் தெரிவித்துள்ளாா். அதனால், குடிநீா் பிரச்னையை தீா்க்க அதிகாரிகளிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.