லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மயானத்துக்கு பாதை இல்லாததால் வயல்கள் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் மயானத்துக்குச் செல்ல பாதை இல்லாததால் வயல்கள் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

Published On :21 ஜூலை 2026, 12:04 am IST

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் மயானத்துக்குச் செல்ல பாதை இல்லாததால் வயல்கள் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

ஆவணியாபுரம் கிராமத்தில் மயானத்துக்குச் செல்ல வழியில்லாமல் இறந்தவா்களின் சடலத்தை, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் விவசாய நிலத்தின் வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (28) என்பவா் ஞாயிற்றுக்கிழமை வாகன விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது இறுதி ஊா்வலம் ஆவணியாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

அப்போது, மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால், கிராம மக்கள் சடலத்தை விவசாய நிலத்தில் சேரும் சகதியுமான வழியாக நெற்பயிா்களை நாசம் செய்து சுமந்து சென்றனா். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அமைச்சா் முதல் மாவட்ட ஆட்சியா் வரை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனா்.

இதனால் மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயானத்துக்குச் செல்ல முறையான பாதை வசதி ஏற்படுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.