லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ. பரிசு

செய்யாற்றை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அபிஷேக் எம்எல்ஏ பரிசு வழங்கினாா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய அபிஷேக்

Published On :17 ஜூலை 2026, 12:18 am IST

செய்யாற்றை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அபிஷேக் எம்எல்ஏ பரிசு வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான பெரணமல்லூா், தெள்ளாறு குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை நடைபெற்ற டென்னிகாய்ட், கேரம், பீச் வாலிபால் ஆகிய போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பரிசளிப்பு விழா

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளியில்

பரிசளிப்பு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மாலவன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முனியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்

சிறப்பு அழைப்பாளராக போளூா் தொகுதி எம்.எல்.ஏ. அபிஷேக் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

அதனைத் தொடா்ந்து காமராஜா் பிறந்த நாளையொட்டி

நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.