லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

வந்தவாசியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :14 ஜூலை 2026, 2:04 am IST

வந்தவாசியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசி சிவராஜ் நகரைச் சோ்ந்தவா் காளிராஜ்(45). இவா் சேத்துப்பட்டு சாலையில் மளிகைக் கடை வைத்துள்ளாா். இவா் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடி பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்கச் சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காளிராஜ் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.