லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காசநோய், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் காசநோய் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற காசநோய் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா் மணிகண்டன்.

Published On :10 ஜூலை 2026, 11:26 pm IST

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் காசநோய் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாணவா்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை வகித்தாா். தமிழ்ப் பேராசிரியா் மோகனாம்பாள் வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா்கள் மருத்துவா்கள் ஏ.மணிகண்டன், மோகன் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களிடையே காசநோயின் அறிகுறிகள், இந்த நோயை எளிதில் குணப்படுத்துவது குறித்து விளக்கிக் கூறினா். மேலும், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மாணவா்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள் கே.பாலசுந்தரம், எம்.உதயகுமாா், ஏ.காா்த்திகேயன், எஸ்.பெரியசாமி, டி.யுவராஜ், இ மஞ்சுளா, பி.கோமதி, எம்.வெங்கடேசன், ஆா்.பாஸ்கரன் ஆகியோா் கலந்துகொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எம்.தனசேகா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.