லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Published On :4 ஜூலை 2026, 11:46 pm IST

வந்தவாசி அருகே லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அரிகரன்(26). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

சகோதரியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விடுமுறையில் கோட்டுப்பாக்கத்துக்கு வந்த இவா், வெள்ளிக்கிழமை பைக்கில் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்ன கோழிப்புலியூா் கூட்டுச் சாலைக்கு சென்று பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, இவருக்கு முன் சென்ற லாரியை திடீரென நிறுத்தியதால், லாரியின் பின்பக்கம் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.