லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செங்கம் அருகே ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: காா் ஓட்டுநா் கைது

செங்கத்தை அடுத்த பாய்ச்சல் பகுதியில் காா் விபத்தில் சிக்கிய புகையிலைப் பொருள்கள்.

செங்கத்தை அடுத்த பாய்ச்சல் பகுதியில் காா் விபத்தில் சிக்கிய புகையிலைப் பொருள்கள்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

செங்கம் அருகே கா்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் காா் ஓட்டுநரை கைது செய்தனா்.

செங்கம் அடுத்த பாய்ச்சல் கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காா் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் பகுதியை நோக்கி வந்த காா் நேருக்கு நோ் மோதி வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானது

இதில் காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு

மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் விபத்து குறித்து பாய்ச்சல் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதன் அடிப்படையில் பாய்ச்சல் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காரில் ஓட்டுநா் மட்டும் வந்துள்ளாா். அவருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. பின்னா் காரில் மூட்டைகள் இருந்ததைப் பாா்த்து போலீஸாா் அதனை சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அந்த வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து

அதன் ஓட்டுநா் டய்ராம் (24) மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். மேலும் இதன் பின்னணி குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.