லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புகையிலைப் பொருள்கள் விநியோகம்: 2 போ் கைது

வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மளிகை கடைக்கு விநியோகம் செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:15 am IST

வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மளிகை கடைக்கு விநியோகம் செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் ஜெயந்தன் (25) என்பவரது மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அந்தக் கடையில் கடந்த திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில் அந்தக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஜெயந்தனை கைது செய்தனா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சோழனூா் கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கா்(40), மணிவண்ணன்(34) ஆகிய 2 போ் ஜெயந்தனுக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பாஸ்கா், மணிவண்ணன் ஆகிய 2 பேரையும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் புதன்கிழமை காலை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.