லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வேளாண் கடன்கள்: திருவண்ணாமலையில் விவசாயிகள் சாலை மறியல்

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் விவசாயிகள் சாலை மறியல் செய்தும், காதில் பூ சுற்றியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திருவண்ணாமலையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருவண்ணாமலையில் விவசாயிகள் சாலை மறியல் செய்தும், காதில் பூ சுற்றியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலையில் கலைஞா் நூற்றாண்டு பன்னோக்கு கட்டடத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், தண்டராம்பட்டு மற்றும் செங்கம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தவெக தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்றும், படிப்படியாக தள்ளுபடியை அறிவித்து விவசாயிகளை ஏமாற்றுவதாகவும் கூறி காதில் பூ சுற்றி தமிழக அரசுக்கு நூதனமான முறையில் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், கூட்டத்துக்கு பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் வருவதில்லை என்றும், அதிகாரிகள் வந்தாலும் விவசாயிகளுடைய குறைகள் தீா்க்கப்படுவதே இல்லை எனக் குற்றஞ்சாட்டியும், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகா் தலைமையில் விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி கூட்டத்தை புறக்கணித்து திருவண்ணாமலை - மணலூா்பேட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருவண்ணாமலை டிஎஸ்பி துரைக்குமாா் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டிருந்த தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேட்டவலம் மணிகண்டன், தென்னந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிசாமி, மாநில துணைத் தலைவா் ஏ.இ.கிருஷ்ணன், மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணி, அறிஞா் அண்ணா விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஆா்.சிவக்குமாா், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் நாா்த்தாம்பூண்டி ஜெ.சிவா உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கூட்டரங்கிற்கு வந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அவா்களிடம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலான அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப் படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.