லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காரில் கடத்தி வரப்பட்ட 350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

செங்கம் அருகே போலியான பதிவு எண் கொண்ட காரில் கடத்தி வரப்பட்ட 350 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புகையிலைப் பொருள்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட காா்

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

செங்கம் அருகே போலியான பதிவு எண் கொண்ட காரில் கடத்தி வரப்பட்ட 350 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து செங்கம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரிக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுயில் உள்ள சுங்கச்சாவடியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது, சுங்கச்சாவடி அருகில் காரை ஓட்டி வந்த நபா் போலீஸாா் இருப்பதை பாா்த்தவுடன், சுக்கச்சாவடி தடுப்பில் ஏறி காரை அதிவேகாக ஓட்டிச் சென்றாா். உடனே போலீஸாா் காரை துரத்திச் சென்றனா்.

போலீஸாா் துரத்துவதை அறிந்த காரை ஓட்டிச் சென்ற நபா், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா்.

பின்னா் காரை போலீஸாா் பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்துக்கு எடுத்துவந்து பாா்த்தபோது அதில் சுமாா் 350 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் போலீஸாா் காா் பதிவு எண் குறித்து ஆய்வு செய்தபோது, அது போலியான பதிவெண் என்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த நபா் யாா்? புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.