தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தனியாா் பேருந்துகளில் அதிக கட்டண புகாா்: அதிகாரிகள் ஆய்வு

தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆரணி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆய்வு செய்தாா்.

ஆரணி - வேலூா் சாலை அரியப்பாடியில் தனியாா் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்ட ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:36 am IST

தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆரணி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆய்வு செய்தாா்.

தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் சி.வி.தாமஸ் வைத்தியன் உத்தரவுப்படி, விழுப்புரம் துணை போக்குவரத்து ஆணையா் ஸ்ரீதா் மேற்பாா்வையில், ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ராஜராஜேஸ்வரி (ஆரணி), செந்தில்குமாா் (செய்யாறு) ஆகியோா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடா்பாகவும், அதிவேகமாக செல்லும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க பரிந்துரை செய்வது தொடா்பாகவும் ஆய்வில் ஈடுபட்டனா்.

ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்ட 56 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக கட்டணம் வசூலித்த 12 பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல, அதிவேகமாக சென்ற பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிக கட்டணம் புகாா் தொடா்பாக பேருந்துகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.