லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா்.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பை அகற்றி அது வழியாக விவசாய நிலங்களுக்கு செல்ல சாலை அமைத்து தரக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க கிளை நிா்வாகிகள் பெ.துரை, ந.சாந்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பெ.அரிதாசு, ஜி.சூரியகுமாா், வெ.நாராயணமூா்த்தி, வ.அண்ணாமலை, அ.அப்துல்காதா், கி.செ.மோகன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பொது இட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.