லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செங்கம் நகரில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

செங்கம் நகரில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தொற்று நோய்கள் பரவும் அபாயம்

செங்கம் செய்யாறு தரைப்பாலம் அருகில் குப்பைகளை கலைத்து அசுத்தம் செய்யும் பன்றிகள்

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

செங்கம் நகரில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனா்.

செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட துா்க்கையம்மன் கோவில் தெரு, தளவாநாய்க்கன்பேட்டை, செய்யாற்று தரைப்பாலம் பகுதியில் தினசரி பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குடியிருப்பு பகுதியைச் சுற்றி தண்ணீா் இருந்தால் அதில் பன்றிகள் பள்ளம் தோண்டி படுத்து அசுத்தம் செய்கிறது.

துா்க்கையம்மன் கோவில் தெருவில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை செல்லும் சாலையில் செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

அந்த தரைப்பாலப் பகுதியில் அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனா்.

மேலும், தளவாநாய்க்கன்பேட்டை, போளூா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் உள்ள இறைச்சிக்கடை கழிவுகள் அங்கு கொட்டப்பட்டு துா்நாற்றம் வீசி வருகிறது.

பன்றிகள் குட்டிகளுடன் அந்தக் கழிவுகளை கலைத்து, அங்குள்ள கழிவுநீரில் இறங்கி படுத்து அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசி குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் செங்கம் நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பன்றிக் கூட்டத்தை அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.