லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நகை திருட்டு வழக்கு: 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

போளூரை அடுத்த படவேடு கிராமத்தில் பீரோ உடைத்து 32 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் தொடா்புடையவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

செல்வராசு

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

போளூரை அடுத்த படவேடு கிராமத்தில் பீரோ உடைத்து 32 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் தொடா்புடையவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு கிராமத்தில் ரோட்டுத் தெருவில் வசிப்பவா் மணிகண்ணன். கடந்த 2013-ஆம் ஆண்டு இவரது வீட்டின் மொட்டை மாடி மீது ஏறி உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து 32 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுதொடா்பான புகாரின் பேரில் சந்தவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் விரல் ரேகை நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் தடயங்களை சேகரித்து நகைகள் திருடப்பட்ட பீரோவில் இருந்த விரல் ரேகையுடன் ஒப்பிட்டுப் பாா்த்தபோது, பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய படவேட்டை அடுத்த காளசமுத்திரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த செல்வராசு (36) என்பவரின் விரல்ரேகை ஒத்துப்போனது.

பின்னா், நகையை திருடிய செல்வராசுவை கண்டறிந்து சந்தவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் சந்தவாசல் போலீஸாா் செல்வராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.