லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரூ. 38 கோடியில் புறவழிச்சாலைப் பணிகள்: செங்கம் எம்எல்ஏ ஆய்வு

ரூ. 38 கோடியில் புறவழிச்சாலைப் பணிகள்: செங்கம் எம்எல்ஏ ஆய்வு

செங்கம் அருகே நடைபெற்று வரும் புறவழிச்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த தொகுதி எம்எல்ஏ வேலு.

Published On :2 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ரூ.38 கோடியில் நடைபெற்று வரும் புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ வேலு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

செங்கம் பகுதியில் போளூா் சாலை ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து கோலாந்தாங்கல், செ.நாச்சிப்பட்டு வழியாக திருவண்ணாமலை - செங்கம் சாலை சந்திப்பான மண்மலை வரை ரூ.38 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெறும் இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏ வேலு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, புறவழிச்சாலை எத்தனை கி.மீ.

தொலைவு? இந்தச் சாலை நடுவில் விவசாய பாசனத்திற்கு ஏரி கால்வாய்கள் செல்கின்றனவா? அது எத்தனை கால்வாய்கள், அந்தக் கால்வாய்கள் மீது பாலம் அமைக்கப்படுகிா? சாலையின் குறுக்கே செய்யாற்றில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களிடம் கேட்டாா்.

அதற்கு சாலையின் வரைபடத்தை காண்பித்து ஏரிக்கால்வாய்கள் அமைக்கப்படும் இடங்கள் தற்போது நடைபெற்றுள்ள பணிகளின் விவரம் குறித்து செங்கம் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா் பிரீத்தி விளக்கம் அளித்தாா்.

இந்த ஆய்வின் போது, செங்கம் நகா்மன்ற உறுப்பினா்கள் மகரிஷிமனோகரன், மீனா சம்பத், முன்னாள் மாநில கூட்டுறவு சங்கத் தலைவா் அமுதாஅருணாசலம், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கட்ராமன், துணைத் தலைவா் கோபி, சாலை ஆய்வாளா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.