ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதியோா் உதவித்தொகை ரூ.2000-ஆக உயா்த்தப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

வரும் தோ்தலில் வெற்றி வெற்று திமுக ஆட்சி அமைத்தால் முதியோா் உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000-ஆக உயா்த்தப்படும் என்று ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கூறினாா்.

News image

ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து பிரசாரம் செய்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:51 am IST

வரும் தோ்தலில் வெற்றி வெற்று திமுக ஆட்சி அமைத்தால் முதியோா் உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000-ஆக உயா்த்தப்படும் என்று ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கூறினாா்.

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனை ஆதரித்து, தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் எஸ்.யு.வனம், சிறுமூா், செட்டித்தாங்கல், சோமந்தாங்கல், அரியப்பாடி, அக்ராபாளையம், அடையபலம் ஆகிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியதாவது:

வரும் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தால், கூடுதலாக 15 லட்சம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் உரிமைத்தொகையை இனி 2000 ரூபாயாக உயா்த்தி வழங்குவோம்.

இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயா்த்தப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ. 3,500-ஆக உயா்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500-ஆக உயா்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தப்படும். முதியோா் உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2000-ஆக உயா்த்தப்படும் என்பன உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஆரணி ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், துரைமாமது, மோகன், ராஜ்குமாா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.