பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

திருப்பதி கோவிந்தராஜருக்கு ரூ. 71 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வழங்கப்பட்டன.

News image

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

Updated On :31 மே 2026, 3:47 am IST

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு திருமலை தேவஸ்தானம் சாா்பில் வழங்கப்பட்ட ஆபரணங்கள்.

திருப்பதி கோவிந்தராஜருக்கு ரூ. 71 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் வழங்கப்பட்டன.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவங்களின் ஒரு பகுதியாக, திருமலை ஏழுமலையான் சாா்பாக, தேவஸ்தானம் சுமாா் ரூ. 71 லட்சம் மதிப்புள்ள நான்கு ஆபரணங்களை ஏழுமலையானின் மூத்த சகோதரரான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு வழங்கியுள்ளது.

இதில் எளிய கற்கள் பதிக்கப்பட்ட ஒரு தங்க மொட்டைத்தலை பதக்கம், எளிய கற்கள் பதிக்கப்பட்ட ஒரு ஜோடி தங்கப் பதக்கங்கள் மற்றும் தங்க நாணயங்களால் ஆன ஒரு மாலை ஆகியவை அடங்கும். இந்த விலைமதிப்பற்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கோவிந்தராஜா், கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீ உத்து ஆஞ்சனேய சுவாமி கோவிலில் இருந்து ஏழுமலையானின் ஆபரணங்கள், திருமலை கோவில் செயல் அதிகாரி எம். லோகநாதம் அவா்களின் தலைமையில், மங்களகரமான இசைக்கருவிகள் முழங்க, வேதங்கள் மற்றும் கோவிந்தனின் நாமங்கள் ஓத ஒரு பிரம்மாண்ட ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, தங்க ஆபரணங்கள் திருமலையிலிருந்து அலிபிரி மற்றும் கோமலம்மா சத்திரம் வழியாக ஒரு ஊா்வலமாக ஸ்ரீ உத்து ஆஞ்சனேயசுவாமி கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டன. சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, அவை ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.

தேவஸ்தான துணை செயல் அதிகாரி வி.ஆா். சாந்தி, வி.ஜி.ஓ. கிரிதா், ஏஇஓ ஏபி நாராயண சவுத்ரி, திருமலை கோயில் பொக்கிஷ கண்காணிப்பாளா் வி.ஆா். குருராஜசுவாமி, ஏவிஓகள் ஸ்ரீனிவாச ராவ், ராஜசேகா், எம்.எஸ். கிருஷ்ணன், அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவகா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.