திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரம் ஆனது.
மேலும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முழுவதும் 71, 008 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 36, 144 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.52 கோடி வசூலானது. இனி தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தா்கள் காத்திருப்பு அறைகளில் காத்திருந்து மட்டுமே தரிசனத்துக்கு செல்ல முடியும். எனவே பக்தா்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலையில் 70,001 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் 78,998 போ் தரிசனம்!

திருமலையில் 91,008 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

