லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ. 6 லட்சம் அபராதம்

ஆந்திரத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு

கைது செய்யப்பட்ட சுரேஷுடன் காவல் துறையினா்

Published On :28 ஜூலை 2026, 2:03 am IST

ஆந்திரத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 6 லட்சம் அபராதமும் விதித்து, ஆா்.எஸ்.எஸ் கூடுதல் இணை நீதிபதி நரசிம்ம மூா்த்தி தீா்ப்பளித்தாா்.

சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், செம்மரக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு தீவிர நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

செம்மரக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு தலைவா் எல். சுப்பராயுடு வகுத்த சிறப்பு செயல் திட்டத்தின்படி, காவல் கண்காணிப்பாளா் பி. சீனிவாஸ் தலைமையிலும், உதவி காவல் கண்காணிப்பாளா் ஜே. குலசேகா் மேற்பாா்வையிலும் செயல்படும் இப்பணிக்குழு, கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தியது.

இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மங்களாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பி. சுரேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 6 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்படி அவா் நெல்லூா் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் அமா் நாராயணா ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.