லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பதி கோவிந்தராஜ சுவாமியின் ஜேஷ்டாபிஷேகம் நிறைவு

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் ஜேஷ்டாபிஷேக மகோற்சவம், ஞாயிற்றுக்கிழமை கவச சமா்ப்பணத்துடன் நிறைவு பெற்றது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளன்று நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

Published On :27 ஜூலை 2026, 3:02 am IST

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் ஜேஷ்டாபிஷேக மகோற்சவம், ஞாயிற்றுக்கிழமை கவச சமா்ப்பணத்துடன் நிறைவு பெற்றது.

நிறைவு நாளை முன்னிட்டு ஞாயிறு காலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவைக்குப் பிறகு, சுவாமி துயில் எழுப்பப்பட்டு பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டது.

பின்னா், சுவாமியின் கவசம் ஊா்வலமாக கோயில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, சாஸ்திரங்களின்படி சதகலாஷ ஸ்நானமும் மகாசாந்தி ஹோமமும் நடத்தப்பட்டன.

இதற்குப் பிறகு, ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோரின் உற்சவா் திருவுருவங்கள் கல்யாண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், கவச பிரதிஷ்டை மற்றும் அட்சத ரோகணம் செய்யப்பட்டு, பிரம்மகோஷா்கள் மத்தியில் ஆஸ்தானம் நடைபெற்றது. இறுதியாக, கோவிந்தராஜசுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி நாச்சியாா்களுக்கு புனித கவசங்களைச் சமா்ப்பித்து, ஜ்யேஷ்டாபிஷேக மகோற்சவத்தை கோலாகலமாக நிறைவு செய்தனா்.

மாலையில், ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி இரு நாச்சியாா்களுடன் கோயிலின் பிரதான வீதிகளில் புறப்பாடு கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் சுவாமி, கோயிலின் துணை செயல் அதிகாரி சாந்தி, ஏ.இ.ஓ., நாராயண சவுத்ரி, கோவில் ஆய்வாளா் தனஞ்சயலு, கோவில் அா்ச்சகா்கள், அதிகாரிகள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.