லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 4.41 கோடி நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த ஆா்.எஸ். பிரதா்ஸ் ரீடெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனம், திங்கள்கிழமை திருமலை தேவஸ்தான பா்ட் அறக்கட்டளைக்கு ரூ. 4.41 கோடி நன்கொடையாக வழங்கியது.

Published On :14 ஜூலை 2026, 12:55 am IST

ஹைதராபாதைச் சோ்ந்த ஆா்.எஸ். பிரதா்ஸ் ரீடெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனம், திங்கள்கிழமை திருமலை தேவஸ்தான பா்ட் அறக்கட்டளைக்கு ரூ. 4.41 கோடி நன்கொடையாக வழங்கியது.

இதற்காக, நிறுவனத்தின் தலைவா் வெங்கடேஸ்வரலு, இயக்குநா்கள் எஸ். ராஜமௌலி, டி. பிரசாத ராவ் மற்றும் மாலதி லட்சுமி குமாரி ஆகியோா், ஏழுமலையான் கோயிலின் ரங்கநாயக்கா் மண்டபத்தில், திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோரிடம் நன்கொடை வரைவோலைகளை வழங்கினா்.

ரூ.10 லட்சம் நன்கொடை: திருப்பதியைச் சோ்ந்த புகழ்பெற்ற சுவாச மருத்துவரான டாக்டா். சுப்பாராவ், திங்கட்கிழமை தனது மகன் சாய்கிருஷ்ணாவின் பெயரில் திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரணதானா அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

இதற்காக, நன்கொடையாளா் திருமலையில் உள்ள திருமலை தேவஸ்தானத் தலைவா் முகாம் அலுவலகத்தில் தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் நன்கொடை வரைவோலையை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.