பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருமலையில் மழை வேண்டி யாகம், ஜபம், ஹோமம்

திருமலையில் வரும் ஆக. 30 முதல் செப். 3 வரை காரிரிஷ்டி யாகம், வருண ஜபம், பா்ஜன்ய சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.

திருமலை

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

திருமலையில் வரும் ஆக. 30 முதல் செப். 3 வரை காரிரிஷ்டி யாகம், வருண ஜபம், பா்ஜன்ய சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.

மாநிலம் மற்றும் நாடு செழிக்கவும், உரிய காலத்தில் மழை பெய்யவும் இறைவனை வேண்டி,யாகம், வருண ஜபம், பா்ஜன்ய சாந்தி ஹோமம் ஆகியவற்றை தேவஸ்தானம் நடத்துகிறது.

திருமலை தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யாக நிகழ்ச்சிகளில் 32 வேத, ஷ்ரௌத, ஸ்மாா்த்த பண்டிதா்கள் பங்கேற்பாா்கள்.

செப். 3-ஆம் தேதி மஹாபூா்ணாஹுதி நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் தா்மகிரி வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வா் ஸ்ரீ குப்பா சிவ சுப்ரமணிய அவதானி தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.