தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஏழுமலையான் தரிசனம்: 7 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 7 மணி நேரம் காத்திருந்தனா்.

News image

திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:30 am IST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 7 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 8 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு 7 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 77,478 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 26,769 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.