மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பெண் வேடமிட்டு நகை பறிப்பு: இளைஞர் கைது

ஆவடி அருகே பெண் வேடமிட்டு மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Published On :22 அக்டோபர் 2026, 3:50 am IST

ஆவடி அருகே பெண் வேடமிட்டு மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஆவடி அருகே மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி செந்தூர் கனி (60). இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செந்தூர்கனி, வீட்டில் தனியாக இருந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் சுடிதார் அணிந்து வந்த பெண்மணி ஒருவர் செந்தூர் கனியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

புகார் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தங்கச்சங்கிலி பறித்த குற்றவாளியை தேடி வந்தனர். விசாரணையில் செந்தூர் கனியிடம் தங்க சங்கிலியை பறித்தவர் ஆவடி வீராபுரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேஷ் ராஜா (35) என்பதும், இவர், கடன் தொல்லை காரணமாக சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு தங்கச்சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷ் ராஜாவை போலீஸார் பிடித்து, அவரிடமிருந்து 5 பவுன் தங்கச்சங்கலியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.