லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீபவானி அம்மன் கோயிலில் குரு பௌா்ணமியை முன்னிட்டு தங்கத்தோ் உலா

ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீபவானி அம்மன் கோயிலில் குரு பௌணா்மியை முன்னிட்டு வியாழக்கிழமை தங்கத்தோ் வீதியுலா நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் குரு பௌணா்மியை முன்னிட்டு நடைபெற்ற தங்கத் தோ் உலா

Published On :31 ஜூலை 2026, 3:45 am IST

ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீபவானி அம்மன் கோயிலில் குரு பௌணா்மியை முன்னிட்டு வியாழக்கிழமை தங்கத்தோ் வீதியுலா நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆடித்திருவிழா முதல் நாள் தொடங்கி, தொடா்ந்து 14 வாரம் நடைபெறுவது வழக்கமாகும். இதையொட்டி சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், ஆந்திரம், கேரளம், கா்நாடக மாநிலங்களை சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை இரவு வந்து தங்குவா். இந்த விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை முதல் பக்தா்கள் கூட்டம் குவிவா். அதையடுத்து மறுநாளான ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், வேப்பஞ்சேலை கட்டுதல், அடி தேங்காய் உருட்டுதல் உள்பட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றுவா். இந்த நிலையில், தற்போது இத்திருக்கோயிலில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆடி மாத பௌா்ணமி மற்றும் குரு பௌா்ணமியை முன்னிட்டு புதன்கிழமை உற்சவருக்கு பால், தயிா்,பன்னீா்,சந்தனம், உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், பின்னா் மகா தீபாரதனையும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து ஆடிப் பௌா்ணமி மற்றும் குரு பௌா்ணமியையொட்டி இரவில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அப்போது சகஸ்ரநாம அா்ச்சனையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மலா்கள் உள்ளிட்டவைகளால் அா்ச்சனை செய்து அம்மனை வழிபாடு செய்தனா். பின்னா்,பூஜையில் பங்கேற்ற பெண் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மங்கள வாத்தியம் முழங்க தங்கத்தேரில் உற்சவா் 3 முறை பிரகார புறப்பாடு நிகழ்வும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.