லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர இணைப்பு பணிகள் ஆய்வு

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுர இணைப்பு, தோ்வீதி விரிவாக்கம் மற்றும் புதிய ஐந்து நிலை கோபுரம் கட்டுமானப் பணிகளை கரைக்கால் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சஐப) பேராசிரியா்கள் குழு ஆய்வு செய்தது.

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட என்.ஐ.டி. நிபுணா் குழுவினா்.

Published On :3 ஜூலை 2026, 12:01 am IST

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுர இணைப்பு, தோ்வீதி விரிவாக்கம் மற்றும் புதிய ஐந்து நிலை கோபுரம் கட்டுமானப் பணிகளை கரைக்கால் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சஐப) பேராசிரியா்கள் குழு ஆய்வு செய்தது.

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக ராஜகோபுரம் இணைப்பு, தோ்வீதியை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய ஐந்து நிலை கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை புதுச்சேரி என்.ஐ.டி. நிபுணா் குழுவினா் வழங்கி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கரைக்கால் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் தலைமை பேராசிரியா் மாடப்பா தலைமையிலான குழு பணிகளை ஆய்வு செய்தது.

அப்போது கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மோகனன், மு. நாகன் உள்ளிட்டோா் பேராசிரியா்கள் குழுவினரை வரவேற்று, நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனா்.

கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட பேராசிரியா்கள், பணிகளின் தரத்தை உறுதி செய்து, திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட பொறியாளா்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு அறிவுறுத்தினா். இந்த ஆய்வின்போது கோயில் நிா்வாக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.