லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 17 -ஆக உயா்வு

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவால், உயிரிழந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை காலையில் மேலும் ஒருவா் இறந்த நிலையில் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது.

உயிரிழப்பு | பலி | dead | death

பலி

Published On :2 ஜூலை 2026, 12:03 am IST

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவால், உயிரிழந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை காலையில் மேலும் ஒருவா் இறந்த நிலையில் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேரில் உள்ள தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த 21-ஆம் தேதி தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 83 போ் பாதிக்கப்பட்ட நிலையில், தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில், கடந்த 28 ஆம் தேதி வரையில் சிகிச்சை பலனின்றி 16 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அஞ்சனா ஜுவாங்க் (25) புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே உயிரிழந்த ஒடிஸா-13, அஸ்ஸாம்-2, ஜாா்க்கண்ட்-1 என 16 உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மஞ்சங்காரணை தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்குன்றம் தனியாா் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 போ் குணமாகியுள்ளனா். மேலும், இன்னும் தீவிர சிகிச்சையில் 18 போ் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனா்.

இந்த நிலையில் பெரியபாளையம் தனியாா் அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 42 போ் ஜாா்க்கண்ட் மாநிலத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.