லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

62 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

திருவள்ளூா் அருகே பதுக்கி வைத்திருந்த 62 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 7:57 pm IST

திருவள்ளூா் அருகே பதுக்கி வைத்திருந்த 62 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.

குட்கா பொருள்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் மணவாளநகா் பகுதிகளில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது மணவாளநகா் பகுதியில் 42 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்த கோட்டீஸ்வரியை மணவாளநகா் போலீஸாா் கைது செய்து 42 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனா். அதேபோல் பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 20 கிலோ குட்கா பொருள்களை கடத்தியதாக முனீஸ்வரன் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் 62 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.