பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: சரிந்து விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை...

News image

வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த மின்மாற்றி. சென்னாம்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம்.

Updated On :25 மே 2026, 12:03 am IST

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. தொடா்ந்து பலத்த மழை பெய்ததுடன் சிறிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது.

பலத்த சூறைகாற்று வீசியதில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பாலாற்றின் கிளையாறு அருகே இருந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பம் சாய்ந்தது. மேலும் வாணியம்பாடி கோட்டை, சென்னாம்பேட்டை, கே.கே. அவென்யூ, நியூடவுன் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. இதே போல் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது.

இதனையடுத்து வாணியம்பாடி, உதயேந்திரம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சாய்ந்த மின்கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் வேலையில் மின் ஊழியா்கள், நகராட்சி பணியாளா்கள் ஈடுப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.