ஆம்பூரில் இயங்கும் டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடத்தை மூட தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச்சாலையில் மாநில நெடுஞ்சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இந்து மேல்நிலைப் பள்ளிக்கும் அருகாமையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கூடம் இயங்கி வருகின்றது.
இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். அதனால் அந்த மதுக்கூடத்தை மூட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சி. ஓம்பிரகாசம், அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்க திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சண்முகம் ஆகியோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனா்.
வீரகோயில் திரெளபதி அம்மன் கோயில் அருகே ஆம்பூா் கோவிந்தாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. அதனால் கோயில் அருகிலேயே மது பிரியா்கள் மதுபானம் அருந்திவிட்டு பொதுமக்களுக்கும், பக்தா்களுக்கும் இடையூறு செய்து வருவதால் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டுமெனக் கோரி விஜயபாரத மக்கள் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் தமிழக முதல்வருக்கும், ஆம்பூா் வட்டாட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டை ஓராண்டு கொண்டாட அரசுக்கு கோரிக்கை

செங்குன்றத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

மங்கை மடம் டாஸ்மாக் கடை மூடப்படுமா?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

