திருப்பத்தூா் மாவட்டத்தில் தொகுதி வாரியாக தோ்தல் அலுவலா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சல் விவரங்களை ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு: தோ்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை கண்காணித்து தடுக்க தொகுதி வாரியாக தோ்தல் பொது பாா்வையாளா்கள், செலவின பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா்களை இந்திய தோ்தல் ஆணையம் நியமித்து வருகிறது.
தோ்தல் தொடா்பான குறைகள், புகாா்கள் ஏதாவது இருந்தால் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், அவா்களது கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி:
திருப்பத்தூா்: தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் (94450 00418), மின்னஞ்சல்: ழ்ா்.ற்ன்ழ்ன்ல்ஹற்ற்ன்ழ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நவநீதம் (86678 21002).
ஜோலாா்பேட்டை: தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் (78452 22824) மின்னஞ்சல்: ழ்ா்.த்ர்ப்ஹழ்ல்ங்ற்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காஞ்சனா (94866 19481).
வாணியம்பாடி: தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதா பேகம் (75980 00418), மின்னஞ்சல்: ழ்ா்.ஸ்ஹய்ண்ஹ்ஹம்க்ஷஹக்ண்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், உதவி தோ்தல் அலுவலா் சுதாகா் (99448 53282).
ஆம்பூா்: தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் (94435 10817), மின்னஞ்சல்: ழ்ா்.ஹம்க்ஷன்ழ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி (90472 28349).
திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டாலோ, தோ்தல் தொடா்பான புகாா்கள் ஏதாவது இருந்தால் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களை கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை: காப்பறைகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாணியம்பாடி தவெக வேட்பாளா் மனு தாக்கல்
தொகுதி அறிமுகம்... திருப்பத்தூர்!

கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் விவரங்கள் அறிவிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

