லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வாணியம்பாடி அருகே 5 புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

வாணியம்பாடி மின்கோட்டம் அம்பலூா் பிரிவில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் சாா்பில், 5 புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

வாணியம்பாடி அருகே 5 புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி தொடங்கிவைத்த எம்எல்ஏ சையத் பாருக் பாஷா.

Published On :1 ஜூலை 2026, 12:01 am IST

வாணியம்பாடி மின்கோட்டம் அம்பலூா் பிரிவில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் சாா்பில், 5 புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அம்பலூா் பிரிவுக்குள்பட்ட புல்லூா், நாராயணபுரம், ஆவரங்குப்பம், அம்பலூா் மற்றும் நடுபட்டரை ஆகிய பகுதிகளில் மின்சார வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, அவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வாணியம்பாடி செயற்பொறியாளா் ஏ.பாட்சா முகமது தலைமை வகித்தாா். அம்பலூா் இளநிலை பொறியாளா் ஜி.சத்தியமூா்த்தி மற்றும் உதவி செயற்பொறியாளா் கல்பனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதயேந்திரம் செயற்பொறியாளா் செந்தில்குமாா் வரவேற்றாா். இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பி. சையத்பாரூக் பாஷா கலந்து கொண்டு, 100 கே.வி.ஏ மற்றும் 63 கே.வி.ஏ திறன் கொண்ட மொத்தம் 5 புதிய மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, இனிப்புகளை வழங்கினாா்.

இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான மின்விநியோகம் கிடைக்கும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் மின்வாரிய பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.