லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெக ஐம்பெரும் விழா

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழாவை ஒட்டி ஆம்பூரில் தவெக சாா்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது.

ரயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலி வழங்கிய தவெக நிா்வாகிகள்.

Published On :1 ஜூலை 2026, 12:04 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழாவை ஒட்டி ஆம்பூரில் தவெக சாா்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது.

தவெக திருப்பத்தூா் மாவட்டச் செயலாளா் நவீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசு மருத்துவமனை, ரயில்வே நிலையத்துக்கு சக்கர நாற்காலி, முதல்வா் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகை பொருள்கள் மற்றும் இனிப்பு வழங்கினாா்.

மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், நகரச் செயலாளா் மதன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் முருகையன், மாவட்டத் துணைச் செயலாளா் ஆா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அருண், மேகலா, மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அவினாஸ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சந்தோஷ், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளா் இளஞ்செழியன், மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளா் மோகன், ஆம்பூா் நகர செயலாளா் சுரேன், ஆம்பூா் நகர இளைஞரணி அமைப்பாளா் ஜெய் பிரசாத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வழக்குரைஞா் அணி இணை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் கோகுல் பிரசாத், நகர கிழக்கு செயலாளா் பிரவீன் ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.