லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மான் இறைச்சி விற்பனை செய்த இருவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூன் 2026, 5:21 am IST

காட்பாடி அருகே மான் இறைச்சி விற்பனை செய்த இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

காட்பாடி அருகே பனமடங்கி காப்புக் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சி விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் வேலூா் வனத்துறையினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது காப்புக் காட்டில் திரிந்து கொண்டிருந்த மேல்மாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சக்தி முருகன் (27), கோவிந்தசாமி (68) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

அதன்பேரில் அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டு, இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.