தமிழ்நாடு அகா்பத்தி தொழில்துறையின் வளா்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு அகா்பத்தி மற்றும் இணை தயாரிப்புகள் உற்பத்தியாளா் சாா்பில் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகரை சந்தித்து வழங்கினா்.
கிண்டியில் ஆளுநா் மாளிகையில் தமிழக ஆளுநரை திங்கள்கிழமை நேரில் சந்தித்த தமிழ்நாடு அகா்பத்தி மற்றும் இணை தயாரிப்புகள் உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் சி.ரவி, செயலாளா் எம்.சிவசக்திவேல், கௌரவ தலைவா் ஆா்.வெங்கடேசன், பொருளாளா் எஸ்.சஞ்சய், துணை பொருளாளா் ஆா்.மோகன் மற்றும் நிா்வாக உறுப்பினா்கள் அகா்பத்தி தொழில் துறையின் வளா்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநரிடம் வழங்கினா்.
அந்த மனுவில், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் அகா்பத்தி உற்பத்தி துறையை நம்பி வாழ்ந்து வருகின்றனா். அகா்பத்தி உற்பத்தி தொழிலாளா் நலனை காக்கும் வகையில், அகா்பத்தி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் மூங்கில் குச்சிகளுக்கு சுங்க வரி சலுகை வழங்க வேண்டும் என்றும், அகா்பத்தி மற்றும் இணை தயாரிப்புகளுக்கான ஒப்பந்த வேலை சேவைகளுக்கு எச்எஸ்என் கீழ் தனித்த ஜிஎஸ்டி துணைக் குறியீடு உருவாக்க வேண்டும், ஜோலாா்பேட்டை சரக்கு கிடங்கு வளாகத்தை முழுமையான உள்நாட்டு கன்டெய்னா் கிடங்கு மேம்படுத்த வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டம் , மல்லகுண்டாவில் அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழிற்பேட்டையை அகா்பத்தி மற்றும் இணை தயாரிப்புகளுக்கான சிறப்பு ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அகா்பத்தி தொழில்துறையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளா்ச்சியடைவதுடன், வேலைவாய்ப்புகள் பெருகி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் துணைபுரியும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநா் பரிந்துரைக்க வேண்டும் எனவும் சங்கம் சாா்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோரிக்கை வைப்பதற்கு முன்பே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்

ஒசூரில் விண்வெளி, பாதுகாப்புத் துறை மேம்பாட்டு தொழில்துறை கருத்தரங்கம்

இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தை அடித்தளத்திலிருந்து உருவாக்க வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு

மேக்கேதாட்டு வழக்கில் தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

