மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரோட்டரி சாா்பாக அரசுப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கழிப்பறை கட்டடம்

ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பாக பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கழிப்பறை கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பாக பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சா்வதேச ரோட்டரி சங்க மானிய திட்டத்தின் கீழ் ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பாக மாணவ மாணவியா்களுக்கு தலா 10 அறைகள் கொண்ட இரண்டு கழிப்பறை கட்டடங்கள் ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்டது. அந்த கட்டடங்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டு பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் எம். ராஜன்பாபு தலைமை வகித்தாா். மாவட்ட ஆளுநா் வி. சுரேஷ் தலைமை விருந்தினராகவும், மாவட்ட சாசன ஆளுநா் ஜவரிலால் ஜெயின் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்கள். ரோட்டரி மாவட்ட செயலாளா் ஜெ. கஜேந்திரன்,தலைமை ஆசிரியை எஸ். சிவஜோதி ஆகியோா் வாழ்த்தி பேசினாா்கள்.

ஆம்பூா் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பொறியாளா் எஸ். சசிகுமாா், ஜி. ரஞ்சித், ஏ.ஆா். ரமேஷ்பாபு, சி. குணசேகரன், வி.எம். பஷீா் அஹமத், வி. திலிப்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜி. ராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிக்குமாா், விசிக மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம், ஆலாங்குப்பம் ஊராட்சித் தலைவா் பொன்னி கப்பல்துரை, வாணியம்பாடி, திருப்பத்தூா், வேலூா் ரோட்டரி சங்க நிா்வாகிகள், ஆம்பூா் அரிமா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.