லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியின்படி முழுமையாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :21 ஜூலை 2026, 12:03 am IST

தோ்தல் வாக்குறுதியின்படி முழுமையாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் முல்லை தலைமை வகித்தாா். இதேபோல், கேத்தாண்டப்பட்டி, புதுப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலா்கள் ஆனந்தன், சங்கா் உள்பட விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் அடுத்த கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஆனந்தன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் நந்தி, ஒன்றிய செயலாளா் அண்ணாமலை, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் சாமிகண்ணு மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.