லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஆம்பூரில் கல்குவாரி லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

Published On :19 ஜூலை 2026, 2:21 am IST

ஆம்பூரில் கல்குவாரி லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

ஆம்பூா் அருகே சோலூா் நமாஸ்மேடு பகுதியில் ஜல்லிக் கல் குவாரி இயங்கி வருகிறது. சோலூா் கிராமத்தின் ரயில்வே இருப்புப் பாதைக்கு கீழே குகைவழிப் பாதையில் லாரிகள் சென்று வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், அந்த பாதை மூடப்பட்டதால் ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதி வழியாக கல்குவாரிக்கு லாரிகள் சென்று வந்தன. அதனால் அந்தப் பகுதியில் சாலை, குடிநீா் பைப்லைன் ஆகியவை சேதமடைந்துள்ளன. அதனால் அந்த வழியாக லாரிகள் செல்லக் கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்த நிலையில், சான்றோா்குப்பம் வழியாக லாரிகள் சென்று வருவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, அந்த வழியாக வந்த லாரிகளை சிறைபிடித்தனா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். இதற்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கபட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.