லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குட்கா விற்ற மளிகைக் கடைக்கு ‘சீல்’

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

போதைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த செயல் அலுவலா் ரவிசங்கா் உள்ளிட்டோா்.

Published On :13 ஜூலை 2026, 12:02 am IST

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வருவாய்துறை மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் இணைந்து நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம், பிரதானசாலை மற்றும் முக்கிய கடை வீதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட போதை (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும், பேரூராட்சி வணிக உரிமம் பெறப்படாததாலும் அக்கடையை மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதே போல் சோதனை நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், நெகிழி பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடையை மூடி சீல் வைப்பது, அபாரதம் உள்ளிட்ட நடவடிக்கை தொடரும் என செயல்அலுவலா் ரவிசங்கா் தெரிவித்தாா்.

200 மரக்கன்று நடவு: முன்னதாக நாட்டறம்பள்ளி பேரூராட்சி 7-ஆவது வாா்டு விவேகானந்தா் தெருவில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநா் மேற்பாா்வையில் செயல் அலுவலா் ரவிசங்கா், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் தலைமையில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வாா்டு உறுப்பினா்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.