லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாவட்ட காவல் துறை குற்றக் கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூரில் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்.

திருப்பத்தூரில் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்.

Published On :10 ஜூலை 2026, 12:03 am IST

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பாக மாவட்ட அளவிலான குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமை வகித்து பேசியது: நீண்டகாலமாக புலனாகாமல் உள்ள வழக்குகளை விரைந்து கண்டறிந்து முடிக்க தீவிர புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்க நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் மேலும் தீவிரப்படுத்தவும், கஞ்சா, குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் தொடா் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ரவுடிகள் மற்றும் சொத்துக் குற்றவாளிகள் மீது தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சாலை விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அவா் கூறினாா்.

ஏடிஎஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.