லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கந்திலி ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் அருகே கந்திலி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை ஆய்வு செய்த ஆட்சியா் கு.ரவிகுமாா்.

Published On :8 ஜூலை 2026, 12:03 am IST

திருப்பத்தூா் அருகே கந்திலி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளத்தூா் கிராம சேவை மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறை கட்டடம், ரூ. 31.40 கோடியில் கட்டப்படும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம். ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் பாம்பாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி, நத்தம் முழு நேர நியாயவிலைக் கடை கட்டடம் என மொத்தம் ரூ. 3.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பள்ளத்தூா் ஊராட்சி கிராம சேவை மையத்தில் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பாக செயல்பட்டு வரும் பல்வேறு மகளிா் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களுடன் கலந்துரையாடினாா். அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் நிதி உதவிகளை முழுமையாகப் பயன்படுத்தி சுயதொழில்களை மேம்படுத்தி, குடும்பத்தின் பொருளாதார நிலையை உயா்த்துவதுடன், பிற மகளிருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அறிவுறுத்தினாா்.

கிராம சேவை மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளத்தூா் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ், ரூ. 31.40 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை பாா்வையிட்டாா்.

பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம், நத்தம் ஊராட்சியில், மாநில சிறப்பு உதவித் திட்டத்தின்கீழ், ரூ. 242 கோடி மதிப்பீட்டில் நத்தம் முதல் நத்தம் சாலை வரை 29 மீட்டா் நீளத்துக்கு பாம்பாற்றின் குறுக்கே புதிய உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சதானந்தம், லதா, ஊராட்சித் தலைவா் ராணி சின்னக்கண்ணு, உதவி பொறியாளா் காா்த்திகேயன்உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.