லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வணிகா்களை பாதிக்கும் நடவடிக்கைகளை காவல்துறை தவிா்க்க வேண்டும்: வணிகா்கள் சங்கம்

வணிகா்களை பாதிக்கும் நடவடிக்கைகளை காவல்துறை தவிா்க்க வேண்டும் என வணிகா்கள் சங்கம் வலியுறுத்தல்

ஏலகிரியில் தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்

Published On :19 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள தனியாா் விடுதியில் தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பு சாா்பில் மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வணிகா்கள் சங்கத் தலைவா் உத்தமராஜா தலைமை வகித்தாா். வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய வணிகா்கள் சங்கத் தலைவா் விக்கிரம ராஜா, தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பின் 44-ஆவது மாநில மாநாட்டுக்கு பாரத பிரதமா் நரேந்திர மோடியை அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றோம்.

தமிழ்நாடு முதல்வா் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என கூறியிருப்பதை வணிகா்கள் சங்க பேரமைப்பு வரவேற்பதுடன் ஊழலை கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக வணிகா்களை குழுக்களாக அமைத்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

சைபா் குற்றங்கள் தொடா்பான புகாா்களில் உரிய விசாரணை இல்லாமல் வணிகா்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து நீண்ட நேரம் காத்திருக்க வைக்கின்றனா். சைபா் கிரைம் வழக்குகளில் காவல்துறை உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வணிகா்களை தேவையின்றி அழைத்துச் செல்லும் நடவடிக்கை தொடா்ந்தால், காவல் துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

மேலும், ஏலகிரி மலையில் குடிநீா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் ஏலகிரியில், குடிநீா் பிரச்னைக்கு அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சுபாஷ், செயலாளா் மாதேஸ்வரன், பொருளாளா் செந்தில்முருகன் மற்றும் வணிகா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.