லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கூலித் தொழிலாளா்களின் தனிப்பட்ட ஆவணங்கள் திருட்டு : மூவா் கைது

கூலித் தொழிலாளா்களின் தனிப்பட்ட ஆவணங்களை திருடி மோசடி கும்பலுக்கு வழங்கிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

கூலித் தொழிலாளா்களின் தனிப்பட்ட ஆவணங்களை திருடி மோசடி கும்பலுக்கு வழங்கிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்த பாரூக் என்பவா் பொதுமக்களின் தனிப்பட்ட ஆவணங்களான ஆதாா், பான் காா்டு விவரங்களை பயன்படுத்தி நூதன முறையில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சைபா் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

Story image

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் பொதுமக்களின் வங்கி, ஆதாா் மற்றும் பான் காா்டு விவரங்களை ஆள்கள் மூலம் சிறிய தொகைக்கு பெற்று, போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்து பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தெரியவந்தது.

பாரூக்குக்கு திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்து கூலித் தொழிலாளா்களின் ஆவணங்களை திருடி அனுப்பியதாக கிடைத்த தகவலின் பேரில் ஆம்பூா் கம்பிக்கொல்லை ஹரிகிருஷ்ணன், ஏ - கஸ்பா முனிசாமி மற்றும் வீராங்குப்பம் பரிமளா ஆகிய மூவரையும் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.