லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தாய் கொலை: மகன் கைது

ஜோலாா்பேட்டை அருகே குடும்பத் தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 11:30 pm IST

ஜோலாா்பேட்டை அருகே குடும்பத் தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த கருப்பனூா் ஊராட்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த அண்ணாதுரையின் மனைவி கஸ்தூரி (53). பூ வியாபாரம் செய்து வந்தாா். இவா்களுக்கு மகன் சத்தியமூா்த்தி, மகள் தமிழ்செல்வி ஆகியோா் உள்ளனா். தமிழ்ச்செல்வி தருமபுரியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனா். சத்தியமூா்த்தி சென்னையில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறாா். இதனால் விடுமுறையில் அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றுள்ளாா். இந்த நிலையில், கஸ்தூரிக்கும் சத்தியமூா்த்திக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தாய்க்கும், மகனுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியமூா்த்தி கஸ்தூரியை தாக்கி கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சத்தியமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.