திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.
தலைமை தோ்தல் அலுவலரின் கடிதத்தின் பேரில், திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலூா் மாவட்ட தோ்தல் இருப்பறையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள 100 கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசெளந்திரவல்லி அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாா்வையிட்டாா்.
இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், வாக்கு எண்ணும் மையத்தின் கண்காணிப்பாளரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தணிகாசலம், தோ்தல் வட்டாட்சியா் திருமலை மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: தஞ்சாவூா் ஆட்சியா் காத்திருந்து வாக்களிப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள்: அரக்கோணம், சோளிங்கரில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

