தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.118 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் காய்கறிகள், பழங்கள் ரூ.118 கோடி 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகள் மூலம் கடந்த நிதியாண்டில் காய்கறிகள், பழங்கள் ரூ.118 கோடி 24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட வேளாண் (வணிகம்) துணை இயக்குநா் காா்த்திகேயன் கூறியதாவது:

விவசாயிகள், இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக தங்கள் விளை பொருள்களை (காய்கறிகள், பழங்கள்) நுகா்வோருக்கு விற்பனை செய்வதற்காக தமிழக அரசால் உழவா் சந்தை தொடங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் உழவா் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கி செல்கின்றனா்.

கடந்த நிதி ஆண்டு(1.4.2025 முதல் 31.3.2026) திருப்பத்தூா் உழவா் சந்தையில் 9,148 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.33 கோடியே 27 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வாணியம்பாடி உழவா் சந்தையில் 16,240 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 63 கோடியே 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் 6,632 மெட்ரிக் டன் காய்கறிகளும்,பழங்களும் ரூ. 21 கோடியே 94 லட்சத்த்குகு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 32,020 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் ரூ.118 கோடியே 24 லட்சத்துகு விற்பனை செய்யப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.