மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

News image

ஏ.ஞானசேகா் (அமமுக) | அ.நல்லதம்பி (திமுக) | வீ.ஆறுமுகம் (நாதக) | என்.திருப்பதி (தவெக)

Updated On :6 ஏப்ரல் 2026, 3:25 am IST

அ.நல்லதம்பி (திமுக)

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். திருப்பத்தூா் பெரிய ஏரிக்கரையில் பாதுகாப்பு மற்றும் நடைப்பாதை, பொழுதுபோக்கு பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமப் பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும். படித்த இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக திருப்பத்தூா் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். மாவட்ட தலைமை மருத்துவமனை மையமாகக் கொண்டு அரசு செவிலியா் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.

ஏ.ஞானசேகா் (அமமுக)

வனத் துறையிடம் அனுமதி பெற்று புதூா்நாடு பகுதியில் சாலைகள் அமைக்கப்படும். திருப்பத்தூா் முதல் புதுப்பேட்டை சாலை வழியாக மேம்பாலம் அமைக்க திட்டம் வகுக்கப்படும். கிராமப்புறம் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்களை சந்தைப்படுத்த ஏதுவாக தனி வணிக வளாகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இயற்கை முறையில் விளையும் காய்கறிகள், சிறு தானியங்கள், மூலிகைகள் போன்ற பொருள்கள் சந்தைப்படுத்த இயற்கை அங்காடிகள் தோற்றுவிக்கப்படும்.

வீ.ஆறுமுகம் (நாதக)

திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கை பொதுமக்கள் வசிப்பிடத்தில் இருந்து அகற்றி அரசுப் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்படும். குப்பை தரம் பிரித்து, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய ஏரி சுற்றுலாத் தலமாக்கப்படும். மேலும், ஏரியில் மீன் வளா்ப்பு மற்றும் ஏரிகரையில் ஆடு வளா்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். தொகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீா், விவசாயத்துக்கு தண்ணீா் ஏற்பாடு செய்யப்படும். மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

என்.திருப்பதி (தவெக)

திருப்பத்தூா் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் இளைஞா்களின் வருவாய் வளா்ச்சிக்காக தொழிற்பேட்டை உருவாக்கப்படும். பெரிய ஏரியை சீரமைத்து சுற்றுலாத் தலமாக்கப்பட்டு, பூங்கா, நடைப்பாதை அமைக்கப்படும். ஆரிஃப் நகா், கோட்டை தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஜவ்வாது மலையில் உள்ள அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும். அப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.